தினமும் 15 நிமிடம் சீரான உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திர்க்கு நல்லது என தைவான் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சி பாங் வென் ஆய்வறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதன்படி தினமும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இறப்பை ஏற்படுத்தும் காரணிகள் 14 சதவிதம் குறைகின்றன.
தினமும் 30-லிருந்து 45 நிமிடங்கள் வரை நடை, ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி என்று செய்வதைவிட 15 நிமிட சீரான உடற்பயிற்சியே சிறந்தது.
ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் 15 நிமிட உடற்பயிற்சி போதுமானது என்று உலக சுகாதார மையமும் அறிவுறுத்ததயுள்ளது
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு 10 சதவிதம் குறைவு.
தொடர்ந்து 6 மணி நேரம் டிவி பார்பவர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் குறைகின்றன.
கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து 4 லட்சத்து 16 ஆயிரம் பேர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆண், பெண், இளம் வயதினர், முதியவர்கள், உடற்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அனைத்து தரப்பினரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
தினமும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்த இவர்களின் உடல் நிலை ஆண்டிற்கு ஒருமுறை பரிசோதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக