திங்கள், 23 ஜனவரி, 2012

நீர் பருகி, நாமும் நலமாய் வாழந்திடுவோம்

தண்ணீர் அருந்துவதும், உடல் இளைப்பதும், எடை குறைவதும், ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நம்புகின்றீர்களா?
பல பத்திரிகைகள் , சஞ்சிகைகள் இதுபற்றி நிறைய எழுதி வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கலாம்?
நிறைய நீரை அருந்தும்போது, அடிக்கடி பாத்ரூம் செல்ல வேண்டி ஏற்படுகின்றது. ஒருவரது சமிபாட்டு முறை சீராகச் செயற்படத்
தொடங்குகின்றது. இந்த நிலையில் ஒருவர் அதிகமான கலோரி உணவை உட்கொண்டு
, நீரையும் நிறைய அருந்தி வந்தால், அது உடல் எடை குறைவதைப் பாதிக்குமா? குடிக்கும் நீருக்கும் , உடல் எடை குறைவதற்கும் எப்படிச் சம்பந்தம் ஏற்படுகின்றது?
 நாம் குடிக்கும் தண்ணீர் உடலின் சமிபாட்டு முறையை சீராக்குவதன் விளைவே எடை குறைவுக்கான காரணமாகும். நாம் உண்ணும் உணவு, சமிபாட்டு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட்ட, தண்ணீரே முக்கிய காரணயாகின்றது. தண்ணீரைக் குடிக்கும்போது பசி என்பது போக்கப்படுகின்றது. உடம்பில் நீர் குறைவாக இருக்கும்போது, எமக்கு
அதிகம் சாப்பிடும் உணர்வு தோன்றுகின்றது. அதே சமயம் நீர் நிறைய அருந்திவரும்போது
, பசிப்பது
என்பது கட்டுப்படுத்தப்படுகின்றது.

உடலில் நீர் அற்ற தன்மை ஏன் வரவேண்டும்? தேநீர், காப்பி, பழரசம், கோலாஎன்று பலவற்றையும் அடிக்கடி அருந்துகிறோமே. இந்த நிலையில் ஏன் உடலில் நீர் பற்றாக்குறை வரவேண்டும் என்று கேட்பது நியாமான கேள்விதான். நீர்ப் பதார்த்தமாக
இருந்தாலும்
, இது தண்ணீர் இல்லை என்பதே யதார்த்தம். தினமும் நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கின்றோம் என்பதைப் பொறுத்தே, எமது எடை கூடுவதோ குறைவதோ, இடம்பெறுகின்றது.
குண்டான உடல் இளைப்பதற்கு  பலரும் பல வழிகளை கையாளுகிறார்கள். நீங்கள்கடைப்பிடிப்பதற்கு எளிதான வழி, சாப்பாட்டுக்கு முன்பு ஒரு அரை லீற்றர் தண்ணீர் குடியுங்கள் போதும், உங்கள் உடல் எடை குறைந்து விடும் என்று புதியஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர்.
சாப்பாட்டுக்கு முன்பு அரை லீற்றர் வீதம் 12 வாரங்களுக்கு தண்ணீர் குடித்தால் நீங்கள் உடல் நிறை குறைந்தவர்கள் ஆகிவிடுவீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நாள் ஒன்றுக்கு 3 முறை சாப்பாட்டுக்கு முன்பு தண்ணீர் குடித்தால்
இரண்டரைக் கிலோ நிறை குறைந்து விடும் என்று பிரெண்டா டேவி என்ற அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். ஆபத்தில்லாத மருந்து அருந்தித்தான் பாருங்களேன்.
நீர் சுகதேகியாக வாழவிரும்பிடின் அருந்திடுவீர் நீர்தன்னை!!!! ;. இனிப்பான பானங்கள் நமக்கு இனியெதற்கு? நாளும்
பொழுதும் நல்ல நீர் பருகி
, நாமும்நலமாய் வாழந்திடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக