திங்கள், 23 ஜனவரி, 2012

உடற்பயிற்சியும் அவசர புத்தியும்

உடற்பயிற்சியும் அவசர புத்தியும்.


லை தெறிக்க ஓடி கொண்டிருந்தவனை ஒருவன் நிறுத்தி எதற்காக ஓடுகிறாய் என்று கேட்டானாம் அதற்கு ஒடிக் கொண்டிருந்தவன் எல்லோரும் ஓடுறாய்ங்ளா? அதான் நானும் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று பதில் சொன்னனாம்.

நண்பர் ஒருவர் என்னிடம் வந்தார் மாஸ்டர் இரண்டு மாதத்தில் ஊருக்கு வெக்கஸேன் போகிறேன் ஊருக்கு போனவுடன் திருமணம் அதனால் என்னுடைய தொந்தியை குறைத்து ஜெஸ்ட்ட கூட்டி கைகளில் ஆம்ஸ் வந்து நல்ல ஆரோக்கியமானவனாக மாறுவதற்கு உங்கள் வகுப்பில் பயிற்சி இருக்கிறதா என்று கேட்டார்.

அவருடைய அறியாமையை நினைத்து எனக்கு வருத்தமாக இருந்தது அவருக்கு உடற்பயிற்சி சம்பந்தமாக ஒரு சில விளக்கங்கள் கொடுத்தேன்.அதை உங்களோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
முதலில் ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.

வெளித்தோற்றத்தில் ஆம்ஸ் ஜெஸ்ட் இருந்து விட்டால் அது ஆரோக்கியமான உடலா?




ஆளாளப்பட்ட அர்னால்டு ஸ்வாஷ்நெகர் அவர்களால் கூட இருதய அறுவை சிகிச்சையிலிருந்து தப்ப முடியவில்லை இரண்டு முறை இருதய (பைபாஸ்) அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

சில தொழில்ரீதியான (ஜிம்) உடற்பயிற்சி நிலையங்களில் 6 மாதத்தில் உடலை ஒரு வழி பன்னி பாடி பில்டர் ஆக்கி விடுகிறோம் என்று சொல்லி இரும்புக் கருவிகளை பயன்படுத்தி ஒரளவுக்கு வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள் வெளிப்புற தோற்ற அழகிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை உள்ளுருப்புகளுக்கு கொடுப்பதில்லை.

விளைவு அளவுக்கதிகமான பாரம் ஏற்றி வண்டியின் அச்சு முறிவது போல்
உடல் நலக் கேட்டை அறியாமல் பெற்றுக் கொள்கின்றனர்.

அதாவது உளுத்துப் போன கதவிற்கு அழகிய வண்ண பெயிண்ட் அடித்து புதிதான வலிமையான கதவு போல காட்டிக் கொள்ளும் உத்தி இது.

பிறருக்காக வாழதீர்கள். உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்யுங்கள். நாம் ஒன்றும் உடலை கட்டழாக்கி சினிமாவில் நடிக்க போவதில்லை. பிறருக்காக வாழ்வது வேதனையானது.

கிரவுண்ட் உடற்பயிற்சி யோகா இவைகள் நீண்ட நாட்களாக செய்தால் தான் பலன் கிடைக்கும் ஆனால் பலன் நிரந்தரமானது எதிர்வினை இல்லாதது. உள்ளுருப்புகளை பாதுகாத்து ஆரோக்கியம் அளிக்கக் கூடியது.

உங்களுக்கு புரியும் மொழியில் சொல்லுவதாக இருந்தால்.

ஒரு கம்யூட்டர் வாங்குகிறோம் (ஹார்டுவேர்) வெளித்தோற்றம் அழகாக இருக்கிறது ஆனால் (சாப்ட்வேர்) அத்தியாவசிய உள்ளுருப்புகள்  சரியில்லை என்றால் அந்த கம்பியூட்டரை புறக்கனிப்போம் அல்லவா.

யோகாவும் கிரவுண்ட் உடற்பயிற்சிகளும் உள்ளுருப்புகளை பேணி பாதுகாக்கும் ஆனால் சிறிது கால தாமதமாகும். ஆனால் துரதிஷ்டமாக நம்பிக்கையோடும் பொறுமையோடும் தினசரி தொடர்ச்சியாக உடற்பயிற்சி யாரும் செய்வதில்லை ரெடிமேட் உலகில் அனைத்தையும் ரெடிமேடாக பெற்றுக் கொள்ள ஆசைப் படுகிறார்கள். 

ஒரு வாகனமோ, ஒரு இயந்திரமோ சரியாக இயங்க வேண்டுமானால் அதற்கு இரண்டு முக்கியத் தேவைகள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே!
அதாவது –
1.அதன் உள்ளுறுப்புகள் பழுதுபடாது நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
2.அதை இயக்க விரும்பியவுடனே செயல்படுமாறு அதற்கு ஒரு லயம் (ரிதம்) இருக்க வேண்டும்.
உடலும் ஒர் இயந்திரமே. அது நன்கு இயங்க இந்த இரண்டு அம்சங்களையும் உடற்பயிற்சிகள் வெகு சிறப்பான முறையில் நிர்வகிக்கிறது.
நமது உடல் நலம் நல்ல, நிலையில் இயங்க அத்தியாவசியமான உள்ளுறுப்புகளை உடற்பயிற்சி செம்மைப்படுத்துகிறது.
எந்த இயந்திரமும் மூன்று நிலைகள் உண்டு.
1.வேகம், 2.மந்தம், 3.நிதானம். வேகமாக ஓடும் இயந்திரம் சீக்கிரத்தில் பழுதுபட்டு விடும். மந்தமாக ஓடும் இயந்திரம் அனைவராலும் புறக்கணிக்கப்படும்.
நிதானமாக ஓரே சீரில் ஓடும் இயந்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். நிதானம் எனப்படும் நடுவு நிலையே உடல் என்ற இயந்திரத்திற்கு அத்தியாவசியமானது.

உடற்பயிற்சிகளை பொறுத்த வரை அவசரப் பாடதீர்கள் பார்க்க எளிமையான பயிற்களாக இருந்தாலும் நிரந்தர பலன்களை அளிக்கக் கூடியவைகளை தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள். நடுநிலையை பேனுங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் ரோம்பவும் முருக்கேற்ற தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக