திங்கள், 23 ஜனவரி, 2012

உண்ணும் உணவு

ஆரோக்கியமான உணவு
நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக  வாழும் மனிதர்களின் ரகசியம் அவர்கள் உண்ணும் உணவு முறையில் தான் ஒளிந்திருக்கிறது.
ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு 80 சதவீதகாரத்தன்மையும், 20 சதவீத அமிலத்தன்மையும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில்இருந்தால் தான் நிறைந்த சக்தியும், நீடித்த ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
மிருகங்களின் மாமிசம், தானியங்கள், அரிசி இவற்றில் அமிலத்தன்மை அதிகம் உள்ளன. பச்சைப் பட்டாணி, வெங்காயம், கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் காரத்தன்மை உள்ளது.
அமிலத்தன்மை ஒரு சதவீதமும், காரத்தன்மை நான்கு சதவீதமும் கொண்ட உணவையே ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேர்வு செய்ய வேண்டும். குடும்ப நலம் பேணும் தாய்மார்கள் சிறந்த உணவு உண்ண
வேண்டும்.
வேலை அலுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் பட்டினி கிடக்கும் பெண்கள் மிகுந்த சக்தி இழுப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இழந்த சக்தியை ஈடு செய்யவும், உடல் நலம் பேணவும் தேவையான கலோரி
சத்துள்ள உணவைக் கண்டறிந்து சாப்பிடுவது அவசியம்.
மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 1800லிருந்து 2000 கலோரி வரை உணவு தேவைப்படுகிறது. இதனை அடைவதற்குத் தக்க உணவை அறிந்து சாப்பிடுதல் மிகவும் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக