திங்கள், 30 ஜனவரி, 2012

கொழுப்பானது 3 வகைப்படும்


கொழுப்பானது 3 வகைப்படும்.முதலாவது வகை L.D.L(Low Density Lipoproteins)
இதுதான் இரத்தகுழாய் அடைப்பிற்கு முக்கிய காரணமான
ஆபத்தான கொழுப்பாகும்.   

இரண்டாவது வகை H.D.L(High density Lipoproteins)அதிக
அடர்தியானது.இது உடலில் சேர்ந்தாலும் கல்லீரலுக்கு
போய் அங்கிருந்து கழிவாக வெளியேறும்.

மூன்றாம் வகை ட்ரைகிளிசரைட்-தசை நார்களுக்கு சக்கியைக்
கொடுப்பதாகும்.இது அதிகமாகும் போது இரத்தத்தில் சேர்கிறது.
இதயம் பாதிக்கும் போது இதன் அளவும் சரி பார்க்கப்படுகிறது.

200மில்லிகிராம் எனில் பிரச்சனையில்லை.200-239 வரை
ஆபத்தாகும்.240ற்கு மேலெனில் விபரீதத்திற்கு வழி
வகுக்கும். எல்.டீ.எல் 130வரையும் எச்.டீ.எல் 60ற்கு மேலும்
ட்ரைகிளிசரைட் 200இற்கு குறைவாகவும்
காணப்பட வேண்டும்.

             இரத்தத்தில் சேரும் கொழுப்பு சிறிது சிறிதாக அதிகமாகி
இரத்தக்குழாயின் சுவரில் ஒட்டி அதை தடிப்பாக்குகிறது.இதனால்
இரத்தம் போவது தடைப்பட்டு கொலஸ்ரோல்,மாரடைப்பு என்பன ஏற்படுகின்றது.
இவற்றைத் தடுக்க நாம் உண்ணும் சில உணவு வகைகள், மனஅழுத்தம் சில
பழக்கவழக்கங்களை தவிர்த்தல் நல்லது.
  •  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக