திங்கள், 23 ஜனவரி, 2012

இன்றியமையாத இரும்புச் சத்து

இன்றியமையாத இரும்புச் சத்து…….

மனிதனுடைய உடல் ஆரோக்கியத்திற்கு, உடம்பில் பல சத்துக்கள் அவசியப்படுகின்றன. காபோஹைட்ரேட், புரதம், கல்சியம் ,விற்றமின், தாதுப் பொருட்கள் என்று  பல சத்துக்கள் வேறுபட்ட உணவு வகைகளை மனிதன் உண்ணும்போதுதான், உடம்பில் பல்வேறு சத்துக்கள் சேர்ந்து , பல நோய்களின் பிடியிலிருந்து, தன்னை அவனால் மீட்டுக் கொள்ள முடிகின்றது. அதாவது நிறையுணவு என்பது அவனுக்கு அவசியம் தேவை.
இரும்புச் சத்து மனிதனுக்கு மிக அவசியப்படும் ஒன்றாகும். இரும்புத் தாதுவை உள்ளடக்கிய பல உணவுப் பொருட்களை மனிதன் அவசியம் தனது அன்றாட உணவில் சேர்த்தாக வேண்டும். குறிப்பாக கருவுற்றிருக்கும்
பெண்ணுக்கு இன்றியமையாததாக அமைவது இந்த இரும்புச் சத்துதான். இரும்புச் சத்து
குறைந்தால், நம்மைத் தேடிவருவது இரத்தச் சோகை நோய்தான்.
பழங்களும், மரக்கறிகளும்  பல சத்துக்களையும் உள்ளடக்கியவையாக இருக்கின்றன. இவைகளை நாம் நிறைய உண்ண வேண்டும். எந்த மரக்கறிகளில் என்ன இருக்கின்றது என்று அறியுமுன்பாக, ஏன் இந்த இரும்புத் தாதுப் பொருட்கள் மனித உடலுக்கு அவசியம் என்பதை சற்றே நோக்குவோம்.
நமது குருதியில், செங்குருதிக் கலம், வெண்குருதிக் கலம் என்று இரண்டும் காணப்படுகின்றன. உடலின் பல அவயவங்களுக்கும், ஒட்சிசனை  இந்தச் செங்குருதிக் கலங்கள் விநியோகிக்க, அவற்றிற்கு hemoglobin   தேவைப்படுகின்றது. இது உடலில்  குறைவாக இருந்தால், பல்தரப்பட்ட
நோய்கள், நம்மிடம் அழையா விருந்தாளிகளாக வந்துவிடும். இரும்புச் சத்து கொண்ட உணவைச் சாப்பிட்டு வந்தால், இந்தத் தொல்லைக்கு இடமிராது.
இரும்புச் சத்து, உடலுக்கு வேண்டிய சக்தியைத் தருவதோடு, மூளை வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களுக்குப் பெருந்துணையாக இருக்கின்றது.
எல்லோருக்குமே இரும்புச் சத்து தேவைதான் என்றாலும், ஒருவருடையவளர்ச்சியின்   வேறு கட்டங்களில், வேறு அளவு இரும்புச் சத்து உடலுக்குத் தேவைப்படுகின்றது. 6தொடக்கம் 12 மாதங்கள் வரை  வயதுடைய
குழந்தைக்குத் தேவைப்படுவது தினமும் 11மி.கிராம் அளவு இரும்புச் சத்து. ஒரு வயது தொடக்கம் 12 வயதுவரை உள்ள பிள்ளைகளுக்கு தினமும் 7தொடக்கம் 10 மில்லிகிராம் அளவு அவசியப்படுகின்றது.
ரீன் ஏஜ் எனப்படும் பதின்வயதினருக்கு, குறி;ப்பாக ஆண்களுக்கு 11 மி.கிராம் அளவும், பெண்களுக்கு 15மி.கிராம் அளவும், தினமும் தேவை. (பெண்களின் மாதவிடாய் இங்கே கணக்கில் எடுக்கப்படுகின்றது). கர்ப்பிணிப் பெண்ணுக்கோ தினமும் 27மி.கிராமுக்கு அதிகமான இரும்புச் சத்து அவசியம் தேவை. அதே சமயம் தாய்ப்பால் ஊட்டும் ஒருவருக்கு 10மி.கிராம் இரும்புச் சத்து போதுமானது.
19வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு அதிகம் இரும்புச் சத்து தேவைப்படுவதில்லை. தினமும் 8 மி.கிராம் அளவு உணவில் இருந்தால் போதுமானது.
எல்லா மரக்கறிகளிலும், பலவகைச் சத்துக்களும் இருந்தபோதிலும், சிலமரக்கறிகள் இரும்புச் சத்துக்கு பிரபல்யமானவை. கீழே தரப்படும் அட்டவணையில் எந்தமரக்கறியில் எந்த அளவு இரும்புச் சத்து உண்டு என்பது சொல்லப்பட்டிருக்கின்றது.
VegetablesQuantityIron (mg)
Soybeans2 cups30
Cooked Spinach2 cups12.8
Swiss Chard (cooked)2 cups8
Peas2 cups6.76
Chickpeas2 cups6.4
Turnip Greens2 cups6.4
Collard Greens2 cups6.2
Potato2 large6
Asparagus2 cups5.74
Parsley1 cup5.5
Water Cress2 cups4.4
Brussels Sprouts2 cups3.8
Cooked Pumpkin2 cups3.4
Beetroot2 cups2.68
பழங்களை நோக்கினால், பேரீச்சம் பழம் நிறைய இரும்புச்சத்தைக் கொண்டது. watermelon  இலும் தாராளமாக இரும்புச் சத்து இருக்கின்றது.
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழிஈரல் போன்றவற்றில் நிறைய இரும்புச் சத்து இருப்பது, மாமிசப்
பிரியர்களுக்கான ஒரு நல்ல செய்தி.
எனவே கண்டதும் கற்று, பண்டிதனாவது போல, பிடித்தமானதையும், பிடிக்காததையும் (இதில் சற்றே
அதிகமாக) உண்டு, பிணியின்றி வாழ்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக